தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் கலை நிகழ்ச்சிகள்

75வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

75வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா மற்றும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை’ கலைக்குழுவினருடன் இணைந்து மெல்லிசை கலை நிகழ்ச்சியை பின்வரும் தேதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை நடத்துகிறது.

2.5.2022 - விமான நிலையம் மெட்ரோ
9.2.2022 - சென்ட்ரல் மெட்ரோ
16.4.2022 - உயர்நீதிமன்றம் மெட்ரோ
23.4.2022 - விம்கோ நகர் மெட்ரோ
30.4.2022 - கிண்டி மெட்ரோ

சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து சிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT