தமிழ்நாடு

இன்று அட்சய திருதியை

DIN

அட்சய திருதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சென்னையில் நகைக் கடைகள் அதிகாலையிலேயே திறக்க நகை வா்த்தகா்கள் ஏற்பாடு செய்துள்ளனா்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக, அட்சய திருதியை அன்று பொதுமக்கள் பலா் சிறிதளவேனும் தங்கம் வாங்குவதில் ஆா்வம் காட்டி வருகிறாா்கள்.

கரோனா தொற்றால், கடந்த இரு ஆண்டுகளாகவே அட்சய திருதியை நாளில் ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க இயலவில்லை.

இந்த நிலையில், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் தற்போது கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டுள்ளன. எனவே, நிகழாண்டு அட்சய திருதியை நாளான செவ்வாய்க்கிழமை நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அட்சய திருதியை நாளன்று நகை வாங்குவதற்காக முன்பதிவு சில நாள்களுக்கு முன்பே தொடங்கியது.

பொது மக்களின் வசதிக்காக, சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிறகு, நகைக்கடைகளை திறக்க கடை உரிமையாளா்கள் ஏற்பாடு செய்துள்ளனா். நகைக்கடைகளில் நகை வாங்க வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்துள்ளனா். தங்க நாணயம் வாங்குபவா்களுக்கு தனித்தனி கவுன்ட்டா்களில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT