தமிழ்நாடு

நெல்லையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

DIN

இன்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நெல்லையில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பின் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொழுகை நடந்தது. மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடந்த சிறப்புத் தொழுகையில் தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ஷம்சுல்லுஹா ரஹ்மானி (தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர்)

இதுபோன்று நெல்லையில் பேட்டை, பாளையங்கோட்டை, மற்றும் மாவட்ட பகுதியில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.  மேலும் ஏழை எளிய மக்களுக்கும் உதவிகள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT