சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 
தமிழ்நாடு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி

சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

DIN

சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த பெரியகருப்பன்(57) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் சுமார் க்கும் 15 அறைகள் உள்ளது. இங்கு வழக்கம்போல் இன்று காலை பட்டாசு ஆலை திறந்து இன்றைய பணிக்கு தேவையான மருந்துகளை கலக்கும் கலவை அறையில் தொழிலாளி பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில் இதில் சுந்தரகுடும்பன்பட்டி பகுதியை சேர்ந்த சோலைவிக்னேஷ்(26) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அம்மாபட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

ஆம்புலன்ஸ் - கார் மோதி விபத்து! 4 பேர் காயம்!

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

SCROLL FOR NEXT