தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு 
தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு

தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப்பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப்பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் ரத்து செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கத்தில், பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடைபெறும். எனவே, இது குறித்து வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT