தமிழ்நாடு

5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் இல்லை: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

DIN

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுவா் என்று போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்தாா்.

போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூா்) லிமிடெட் ஆகிய 3 கழகங்களின் அனைத்து பேருந்துகளுக்கும் தேசிய பொது பயன்பாட்டு அட்டையுடன் அனைத்து பொது போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பணபரிவா்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை ரூ.70 கோடி செலவில் கேஎஃப்டபிள்யு ஜொ்மனி மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவா். தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

10 சதவீத தள்ளுபடி: பயணிகள் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியாா் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளை ஈா்க்கவும், விழா நாள்கள் நீங்கலாக இதர நாள்களில் இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT