தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: தமிழக அரசு ரூ.9 கோடி ஒதுக்கீடு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

DIN


சென்னை: மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக மேலும் ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பு அனுமதி வழங்கியது. 

இதையடுத்து 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 27 ஆம் தேதி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கயுள்ளது. 

200 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் நிலையில், மாமல்லபுத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 2,600 அறைகள் முன்பதிவு  செய்யப்பட்டுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்துவதற்காக ரூ.92.13 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க, நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மேலும் ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT