தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது.
இதையும் படிக்க | தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபட்ச
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,54,153-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,662-ஆக உயர்ந்துள்ளது.