தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் நகைக்கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை‌ 

DIN

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நகை அடகு கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌ 

சின்ன காஞ்சிபுரம், மூன்றாம் திருவிழா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் விமலசந்த். இவர் கருக்குப்பேட்டை மெயின் ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் இரவு எட்டு முப்பதுக்கு கடையை பூட்டிவிட்டு தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றை டிராவல் பேக்கில் வைத்து பாதுகாப்பாக தனது இருசக்கர வாகனத்தில் முன்புறம் வைத்துக்கொண்டு காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தார்.

அய்யம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து திடீரென தொலைபேசி அழைப்பு வந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஹெல்மெட் அணிந்து பல்சர் வாகனத்தில் வந்த இரு நபர்கள் இவரது வாகனத்தை எட்டி உதைத்து நிலை தடுமாற செய்தனர்.

இதில், வாகனம் சாலையின் பக்கவாட்டில் சாய்ந்த போது வாகனத்தில் இருந்த ஒரு நபர் இறங்கி நகைக்கடை உரிமையாளரின் பையை பறித்துக் கொண்டு இருவரும் மின்னல் வேகத்தில் காஞ்சிபுரம் நோக்கி தப்பி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறை ஆய்வாளர் ஜெயவேலுவிடம்  புகார் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

நகை உரிமையாளர் கொண்டு சென்ற பையில் 132 கிராம் தங்க நகைகளும், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு இருக்கும் எனும் தெரிய வருகிறது.

நாளை அவரது குடும்ப நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதால் கடை விடுமுறை என்பதால் நகைகளை‌ எடுத்து சென்றதாகவும், இவரது கடையிலிருந்து புறப்படும் போது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்றது சிசிடிவி காட்சியில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் பார்த்து வழிப்பறி நபர்களை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் சுற்றுப் பகுதி முழுவதும் காவல்துறையினரை உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT