முகப்பு
தமிழ்நாடு

வழக்கறிஞர்களுக்கு அங்கி அணிவதிலிருந்து தற்காலிக விலக்கு: சென்னை உயர்நீதிமன்றம்

கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வழக்கறிஞர்களுக்கு கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. 

அந்த கோரிக்கையை ஏற்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, கோடைக்கால அமர்வுகளில் அங்கி அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்துள்ளதாக தலைமை பதிவாளர் பி.தனபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அங்கி அணிவதிலிருந்து விலக்கு அழைக்கப்பட்டாலும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை கட்டாயம் அணிய வேண்டும்  எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →