தமிழ்நாடு

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1000-ஐ தாண்டியது

14 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. 

14 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்தாலும் மானியம் மட்டும் ரூ.25 மடுமே வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

கடந்த சில நாள்களுக்கு முன்பு வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டா் விலை ரூ.50 உயா்ந்து ஒரு சிலிண்டா் விலை ரூ.965.50 ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

விலையேற்றத்தை குறைக்க வணிகர்களும், பொதுமக்களும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ளது.

2022-ல் சமையல் எரிவாயு விலையேற்றங்கள் விவரம்:

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டா் விலை ரூ.50 உயா்ந்து ஒரு சிலிண்டா் விலை ரூ.965.50 ஆக இருந்தது.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மே தொடக்கத்தில் மேலும் ரூ.102.50 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து மூன்றாவது மாதமாக அதன் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

தில்லியில் மே 1-ஆம் தேதி ரூ.102.50 உயா்த்தப்பட்டதன் காரணமாக 19 கிலோ வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.2,355.50-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ரூ.105 அளவுக்கும், ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ.250 அளவுக்கும் வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தில்லியில் உயா்த்தப்பட்டது.

தில்லியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை கடந்த மாா்ச் மாதம் ரூ.50 உயா்த்தப்பட்டு ஒரு சிலிண்டா் விலை ரூ.949.50-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT