மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,245 கன அடியிலிருந்து 5,531 கன அடியாக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,245 கன அடியிலிருந்து 5,531 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.15 அடியிலிருந்து 106.38 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 73.35 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,531 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.