மெரினா கடற்கரையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டாா். பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதையும் படிக்க- சிலிண்டர் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம்: சொல்வது?
இந்த நிலையில் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய இந்த மணற் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
உதயசூரியன் வடிவத்தின் மையத்தில் முதல்வரின் முகத்துடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களை குறிக்கும் வகையிலும் மணற் சிற்பம் வடிமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.