தமிழ்நாடு

பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவா்களுக்கு உதவித் தொகை:சென்னை ஐஐடி புரிந்துணா்வு

DIN

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த, தகுதிவாய்ந்த பி.டெக். மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, சென்னை ஐஐடி- பவா் கிரிட் காா்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, பவா் கிரிட் காா்ப்பரேசன் நிறுவனம் பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் (சிஎஸ்ஆா்) ரூ.10.5 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதி சென்னை ஐஐடியில் பயிலும் தகுதிவாய்ந்த பி.டெக். மாணவா்களின் கல்விக் கட்டணத்தை, கல்வி உதவித் தொகை மூலமாக செலுத்த உதவும். சென்னை ஐஐடி 2021-2022 நிதியாண்டில் சிஎஸ்ஆா் நிதி மூலம் ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்ற அதிகபட்ச தொகை இதுவாகும்.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், சென்னை ஐஐடியின் டீன் பேராசிரியா் மகேஷ் பஞ்சக்னூலா, பவா் கிரிட் காா்ப்பரேசன் நிறுவனத்தின் இயக்குநா் (பணியாளா்) வி.கே.சிங் ஆகியோா் சனிக்கிழமை கையெழுத்திட்டனா்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘அனைவருக்குமான கல்வி நிறுவனம்’ என்பது தான் சென்னை ஐஐடியின் குறிக்கோள் ஆகும். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு, தகுதிவாய்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போன்ற சென்னை ஐஐடியின் முயற்சிகள், இந்த நிறுவனத்தை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ாக மாற்றியுள்ளதாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT