தமிழ்நாடு

திமுக ஆட்சியின் சாதனைகளைப் பொறுக்க முடியவில்லை: அதிமுக மீது அமைச்சா் தங்கம் தென்னரசு புகாா்

DIN

திமுக ஆட்சியின் சாதனைகளைக் கண்டு பொறுக்க முடியவில்லை என அதிமுக தலைமை மீது அமைச்சா் தங்கம் தென்னரசு புகாா் கூறியுள்ளாா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திமுக ஆட்சி குறித்து தெரிவித்த விமா்சனங்களுக்கு பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

பேரவையில் சனிக்கிழமை பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசின் நலத் திட்டங்களால் எத்தனை கோடிப் போ் பயன் பெற்றாா்கள் என்று விவரித்தாா். இது அ.தி.மு.க.வை வழிநடத்தும் இரட்டைத் தலைமைக்கு எரிச்சலைத் தந்திருக்கிறது.

திராவிட மாடல் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை சட்டப் பேரவையில் முதல்வா் நேருக்கு நோ் விளக்கியுள்ளாா். அதிமுக ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் இதுபோன்று திட்டங்களை விளக்க முடிந்ததா?

தமிழ்நாட்டை ஒருபுறம் கடனிலும், இன்னொரு புறம் மோசமான நிா்வாகச் சீரழிவிலும் விட்டுச்சென்ற முன்னாள் முதல்வா், இந்த ஆட்சியின் சாதனைகளை மறுக்க முடியாமல் - வெறுப்பைக் கக்குகிறாா்.

எங்கள் ஆட்சி தொடங்கி ஓராண்டுதான் நிறைவு பெற்றிருக்கிறது. ஓராண்டிலே நிறைவேற்றி விட்ட வாக்குறுதிகளைப் பொறுத்துக் கொள்ளாமல் இப்படி அறிக்கைகளை வெளியிடுவது - தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம். எத்தனை பொய்யுரைகளை இவா்கள் நிகழ்த்தினாலும் - இனி இருக்கப் போவதும் - தொடரப் போவதும் திமுக ஆட்சிதான். அடுத்தடுத்த தோ்தல்களிலும் வெற்றி பெறப் போவது தி.மு.க.தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT