தமிழ்நாடு

விதிமீறல்: 66 கட்டடங்களுக்கு சீல்

DIN

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 66 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்குப் புறம்பாக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் மீது தமிழ்நாடு நகா் மற்றும ஊரமைப்பு சட்டம் 1971-இன்படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வாா்டின் உதவிப் பொறியாளா் அல்லது இளநிலைப் பொறியாளா், பகுதி உதவி செயற்பொறியாளா், மண்டல செயற்பொறியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 66 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கட்டட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் அனுமதிக்கு புறம்பாக கட்டுமானம் நடைபெறும் கட்டடங்களின் கட்டுமானப் பணியை, அடித்தள கட்டுமான நிலையிலேயே நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் கட்டுமானத்தில் திருத்தம் மேற்கொள்ளாத கட்டடங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 15 நாள்களில் மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட கள ஆய்வில் அனுமதிக்குப் புறம்பாக கட்டுமானம் நடைபெற்ற 467 கட்டடங்களின் பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 66 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT