தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 அடியாக உயர்வு

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி  107.06 அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,135 கன அடியிலிருந்து 3,773 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.94 அடியிலிருந்து 107.06 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 74.29 டிஎம்சியாக உள்ளது.

அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT