தமிழ்நாடு

உயர்கல்வி மாணவிகளுக்கு இந்தாண்டு முதல் ரூ. 1,000: அமைச்சர் பொன்முடி

DIN

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ஆம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், குளறுபடி இல்லாமல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT