திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 1.30 கோடிக்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். 
தமிழ்நாடு

இலங்கை மக்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் நிதியுதவி

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 1.30 கோடிக்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.

DIN

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கப்பட்டது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகின்றது. 

திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சார்பிலும் ஒரு மாத ஊதியம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 1 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர். 

இதையும் படிக்க | திமுக ரூ. 1 கோடி நிதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT