தமிழ்நாடு

‘பீப் பிரியாணி இலவசமாக தருவோம்’: கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லையெனில் இலவசமாக தருவோம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் அறிவித்துள்ளன.

DIN

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லையெனில் இலவசமாக தருவோம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் அறிவித்துள்ளன.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் வரும் மே 13-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரியாணி திருவிழா , ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பீப் பிரியாணி விற்பனைக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விசிக, மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவிழாவில் பீப் பிரியாணியை விற்பனை செய்ய அனுமதி வழங்கவில்லை என்றால், வர்த்தக மைய வளாகத்திற்கு வெளியே வைத்து இலவசமாக பீப் பிரியாணி விநியோகிப்போம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லஹங்காவில் மிளிரும்... மௌனி ராய்!

ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு எதிரொலி: 4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

படித்திருக்கிறாயா? இல்லையா?: மருத்துவர் திவாகருக்கு நடிகை வியானா அறிவுரை!

இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: சிபிஐ விசாரணை கோரி மனு!

உன்னருகே ஓர்நாள்... ஐஸ்வர்யா லட்சுமி!

SCROLL FOR NEXT