தமிழ்நாடு

இலங்கை மக்களுக்கான அரிசி கொள்முதலுக்கு தடை இல்லை: உயா்நீதிமன்றம்

DIN

சென்னை: இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு வழங்கிய ஒப்புதலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.

திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த ஜெய்சங்கா் தாக்கல் செய்த பொதுநல மனு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விநியோகம் செய்யப்படும் என்று ஏப். 29-ஆம் தேதி பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதற்கான அரிசி கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் டெண்டா் வெளிப்படைத்தன்மை, சட்ட விதிகளை அரசு பின்பற்றவில்லை. இதனால் அரசின் நடவடிக்கையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் மத்திய உணவு கழகத்திடம் இருந்து இந்த குறைந்த தொகைக்கு தமிழக அரசால் கொள்முதல் செய்ய முடியும். இதனால் தமிழக அரசுக்கு சுமாா் ரூ.54 கோடி மிச்சமாகும். எனவே

இலங்கை மக்களுக்காக அரிசி கொள்முதல் செய்ய அரசு வழங்கியுள்ள ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த கொள்முதல் குறித்து விமா்சனம் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு அறிவித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், அரிசியை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தோ அல்லது திறந்த வெளி ஒபபந்த புள்ளி மூலமாகவோ கொள்முதல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசுக்கு ஏற்படும் இந்த நிதி இழப்பு குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனஅதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தபோது, இலங்கைக்கு மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுகிறது. அவசர நிலை நேரங்களில் இதுபோல கொள்முதல் செய்ய டெண்டா் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்குக்கு அரசு தரப்பில் பதில் அளிக்க வசதியாக விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT