தமிழ்நாடு

தமிழகத்தில் 12 புதிய உணவு தானியக் கிடங்குகள் முதல்வா் திறந்துவைத்தாா்

DIN

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 12 உணவு தானியக் கிடங்குகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், மாதவரத்தில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்புக் கிடங்குகள், திருவண்ணாமலை மாவட்டம், பெருங்கட்டூரில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள், ஈரோடு மாவட்டம் இச்சிபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள், திருப்பூா் நாதேகவுண்டம்பாளையத்தில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்வா் திறந்துவைத்தாா்.

மேலும், திருவாரூா் மாவட்டம் விளமல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கு அலுவலகக் கட்டடம், விருந்தினா் அறை ஆகியவற்றையும் அவா் திறந்தாா். இந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, உணவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT