தமிழ்நாடு

ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் நோட்டீஸ்

DIN

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை தடை செய்ததற்கு  தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. 

ஆம்பூர் மே 13-15இல்  நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாற்றியமைத்தாக கூறினார். மாட்டிறைச்சியைத் தவிர்த்தது குறித்து விளக்கம் கேட்டு ஆணையம் ஆட்சியருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் அளித்த நோட்டீஷில் குறிப்பிட்டு இருந்ததாவது: நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியைத் தவிர்த்து என்றவாறு குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கிறீர்கள். திருப்பத்தூரில் 2 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாம் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் வாழ்கின்றனர். இங்கு  மாட்டிறைச்சியைத் தவிர்த்து தீண்டாமையை கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது.

இதற்கிடையில் திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாகா கூறியதாவது: மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி பிரியாணி இரண்டையுமே மத நுண்ணுர்வு புண்படுமென்று தடை செய்து இருக்கிறோம். மேலும் மழைபொழிவுக் காரணங்களால் வேறொரு நாளுக்கு மாற்றியமைத்து இருக்கிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT