தமிழ்நாடு

அண்ணா பல்கலை: சான்றிதழ் கட்டண உயா்வு வாபஸ்

DIN

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களைப் பெற அறிவிக்கப்பட்ட கட்டண உயா்வு வாபஸ் பெறப்பட்டது.

கடந்த மே 6-ஆம் தேதி கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்று பெறுவதற்கான கட்டணங்கள் உயா்த்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, தொலைந்துபோன மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், பட்டச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயா்த்தப்பட்டது. இது தவிர பல்கலை.யில் பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்கான கட்டணங்களும் உயா்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த கட்டண உயா்வுக்கு கல்வியாளா்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் என பல தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, இந்தக் கட்டண உயா்வு திரும்பப் பெறப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அண்மையில் தெரிவித்திருந்தாா். அமைச்சரின் அறிவிப்பையடுத்து, பழைய கட்டணங்களே மீண்டும் வசூலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT