வெங்கையா நாயுடு (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

கருணாநிதி சிலை மே 28-இல் திறப்பு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை, சென்னையில் வருகிற 28-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை, சென்னையில் வருகிற 28-ஆம் தேதி திறக்கப்படுகிறது. சிலையை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறாா். ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதிக்கு ரூ.1.56 கோடி செலவில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. சிலை திறப்பு விழா வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளது. ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினமாகும். அன்றைய தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT