தமிழ்நாடு

மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு

DIN

மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

1 வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அதேசமயம் பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஜூன் 24- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT