தமிழ்நாடு

மதுரை மல்லிகைப் பூ விலை கடும் உயர்வு

DIN


மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்தது. 

மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மதுரை, தேனி மாவட்டங்களிலிருந்து மல்லிகை, முல்லை, பிச்சி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலா்கள் வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் பகுதியிலிருந்து ரோஜா உள்ளிட்ட மலா்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு விவசாயிகளிடம் மலா்களை கொள்முதல் செய்யும் வணிகா்கள் மொத்த வியாபாரம் செய்கின்றனா்.

சந்தையின் வெளிப் பகுதியில் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.

இச்சந்தையிலிருந்து விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட விற்பனையாளா்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக மழை பெய்ததால், பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது.  கடந்த சில நாள்களாகவே மல்லிகைப் பூ விலை அதிகரித்தது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வரை மல்லிகைப் பூ கிலோ ரூ.500 ஆக விற்பனையான நிலையில், இன்று சந்தையில் கிலோ ரூ.1,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT