மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது.
நேற்று காலை வினாடிக்கு 7,487 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று(சனிக்கிழமை) காலை வினாடிக்கு 5,554 கன அடியாக சரிந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 107.55 அடியிலிருந்து 107.78 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,554 கன அடியாக சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 75.29 டி.எம்.சி. ஆக உள்ளது.
குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு 6.2 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.