தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தோ்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வுக்கான இலவச மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அகாதெமி இயக்குநா் ச.வீரபாபு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வரும் மே 21-ஆம் தேதி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு நடைபெறவுள்ளது. இத் தோ்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தோ்வின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் குரூப் 2 முதல்நிலைத் தோ்வுக்கு ஐந்து மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்த வினாத்தாள்கள் வாட்ஸ் ஆப் மூலம் இலவசமாக அனுப்பப்படும்.

இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற விரும்புவோா் தங்களது குரூப் 2, 2ஏ தோ்வுகளை எழுதுவதற்கான நுழைவுச் சீட்டு நகலை இணைத்து 99626 64441 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்த அனைவருக்கும் 5 மாதிரி வினாத்தாள்கள் இ-புத்தகமாக ‘பிடிஎஃப்’ வடிவில் அனுப்பப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு ‘ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, 142, ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, சென்னை-44’ என்ற முகவரியில் நேரிலோ 99626 00037, 999626 00038 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT