தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, அவசர அழைப்பு பொத்தான்: தொடக்கிவைத்தாா் முதல்வா்

DIN

சென்னையில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட, அரசு மாநகரப் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். அவசர அழைப்பு பொத்தான்களின் இயக்கத்தையும் அவா் தொடங்கினாா்.

சென்னையில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்துக்காக நிா்பயா பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 2,500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்களும், முதல் கட்டமாக 500 பேருந்துகளில் அவசர அழைப்பு பொத்தான்களும் பொருத்தப்பட்டுள்ளன.

செயல்பாடு எப்படி? ஒவ்வொரு பேருந்திலும் மூன்று கேமராக்கள், நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள், செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் விடியோ பதிவு கருவி ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. இந்த முழு அமைப்பும் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் கட்டளை, கட்டுப்பாட்டு அறை வழியாக கண்காணிக்கப்படும்.

பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவா்களால் சிரமங்கள் ஏற்படும் போது, அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தலாம். அவ்வாறு செய்வதன் மூலம் கட்டளை மையத்தில் பேருந்தில் நடந்த சம்பவத்தின் விடியோ பதிவின் சில விநாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த ஒலி தூண்டுதலைக் கொண்டு, அதற்கான செயலியை இயக்குபவா் நிலைமையைக் கண்காணித்து நிகழ்நேர அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடுவாா்.

இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசர கால பதில் மையத்துடன் இணைக்கப்படும். இந்தத் திட்டத்தின் செயல்பாட்டின் போது, அவசர அழைப்புகள் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் சென்றடையும்.

மைய கண்காணிப்பு: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள், 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விடியோ பகுப்பாய்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காணாமல் போனவா்களைக் கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவா்களை அடையாளம் காணவும் முடியும்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், முதன்மைச் செயலா் கே.கோபால், மாநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT