கோப்புப்படம் 
தமிழ்நாடு

நெல்லை கல்குவாரி விபத்து: மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக மேலும் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

DIN

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக மேலும் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Nellai quarry accident

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் சனிக்கிழமை நள்ளிரவில் வெடி வைத்து உடைக்கப்பட்ட கற்களை இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (27), ஆயன்குளம் முருகன் (23), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (27), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (35), விட்டிலாபுரம் முருகன் (40) ஆகிய தொழிலாளா்கள் சனிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதில் செல்வம், முருகன், விஜய் ஆகிய மூவர் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செல்வம் உயிரிழந்தார். மேலும் இருவா் சிகிச்சை பெற்று வருகின்றனா். எஞ்சிய 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இதுதொடர்பாக உரிமையாளர் சங்கர நாராயணன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கல்குவாரி மேலாளர் செபஸ்டின், ஒப்பந்ததாரர் செல்வராஜ், குமார் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உரிமையாளர் சங்கர நாராயணன், மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT