தமிழ்நாடு

நிவாரணப் பொருள்கள்: சென்னையிலிருந்து இன்று இலங்கைக்கு அனுப்பிவைப்பு

DIN

சென்னையிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கைக்கு இன்று புறப்படும் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவ நிவாரணம் வழங்க தமிழக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், சென்னையிலிருந்து கப்பல் மூலம் ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அாிசி, ரூ. 15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருள்கள் இன்று மாலை 5 மணிக்கு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த கப்பலை சென்னை துறைமுகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT