தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  கேரளம் மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி முதல் கள்ளக்குறிச்சி வரையிலான 16 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். 

அதேபோல, தென் மாநிலங்களையொட்டிய அரபிக்கடல், குமரி கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், இன்றும், நாளையும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த வரக்கூடிய 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வருகிற 21-ஆம் தேதி முதல் இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ள நிலையில்,  23 ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

தமிழில் அறிமுகமாகும் காந்தாரா வில்லன்..! 47 வயதில் புதிய தொடக்கம்!

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜுக்கு ‘பூஜ்ஜியம்’!

பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!

அதிர்ஷ்டம் யாருக்கு? வார பலன்கள்!

SCROLL FOR NEXT