திருச்சியில் ரூ.18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார்.  
தமிழ்நாடு

திருச்சியில் ரூ.18.75 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சியில் ரூ.18.75 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார்.

DIN

திருச்சி: திருச்சியில் ரூ.18.75 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார். 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில், நீர்வளத் துறையின் சார்பில் அரியாறு மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டங்களுக்குள்பட்ட ஆறுகள், வடிகால்கள் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணி ரூ.18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மணிகண்டம் ஒன்றியம், புங்கனூரில் அரியாறு, கருமண்டபம் பகுதியில் கோரையாறு, வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் பாலம் மற்றும் பாத்திமா நகர் பகுதியில் குடமுருட்டி, ஆறு, கம்பரசம்பேட்டை பகுதி மற்றும் கொடிங்கால் வடிகால் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு வெள்ளிக்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிய அளவீடுகளின்படி தூர்வாரும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும், வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் கே.என் நேரு உத்தரவிட்டார். 

இந்நிகழ்வுகளில், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர், கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT