உதயநிதி ஸ்டாலின் 
தமிழ்நாடு

தமிழகத்தின் அடுத்த முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயாரக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். 

DIN



ஸ்ரீவில்லிப்புத்தூர்: மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயாரக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்னும் 20 ஆண்டுகள் முக.ஸ்டாலின்தான் முதல்வர்.

கருணாநிதிக்கு பின் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போல, அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும், வாரிசாக இருந்தாலும் இருவரும் பல்வேறு சிரமங்களைத் தாண்டி மேலே வந்தவர்கள் என கூறினார். 

மேலும், திமுகவை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை. முதலில் நீங்கள் அனைவரும்(அதிமுக) ஒன்று சேர்ந்து சண்டைக்கு வாருங்கள் என விமர்சித்தவர், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் கேடு கேட்ட ஆட்சி நடைபெற்றதாகவும், அவர்கள் அரசு கஜானாவை சுரண்டிவிட்டதாக குற்றம்சாட்டியவர், தற்போது, நல்ல ஆட்சி நடைபெற்று வருவதாகவும், நமது முதல்வர் நல்ல முதல்வர். ஒவ்வொருவர் குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். 

மேலும், தில்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT