முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: மே 24ல் மறியல் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து திட்டமிட்டபடி மே 24 இல்  மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என சனிக்கிழமை போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். 

Updated On : 21 மே 2022, 1:15 pm IST
மானாமதுரையில் வைகையாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்துவது தொடர்பாக போராட்டக் குழுவினர் பங்கேற்ற கூட்டம்.
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து திட்டமிட்டபடி மே 24 இல் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என சனிக்கிழமை போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். 

மானாமதுரை வைகை ஆற்றில் குடிநீர் திட்டங்களுக்கும், பாசனக் கிணறுகளுக்கும் உலை வைக்கும் வகையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளடக்கிய போராட்டக் குழுவினர் வரும் மே 24 ஆம் தேதி மானாமதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். 

இதனிடையே,  சிவகங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஆனால். குவாரி செயல்படுவது உறுதி என தெரிவித்ததாக தகவல் பரவியது. 

Advertisement

Advertisement

இதையடுத்து மறியல் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மானாமதுரையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மானாமதுரையில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக தெரிவித்த தகவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மானாமதுரை வைகையாற்றில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்தும் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திட்டமிட்டபடி மானாமதுரையில் மே 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதுரை - ராமேஸ்வரம் சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். 

மேலும், இப் போராட்டத்தை விளக்கி பிரசாரம் செய்வது, மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு கோருவது, மானாமதுரை வர்த்தகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது என தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments