மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைக் காண திமுகவினருக்கும் ரசிகர்களுக்கும் எம்.எல்.ஏ தமிழரசி இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கினார். 
தமிழ்நாடு

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி: இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கிய திமுக எம்.எல்.ஏ

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்க்க சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி திமுகவினருக்கும், ரசிகர்களுக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினார்.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்க்க சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி திமுகவினருக்கும், ரசிகர்களுக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. மானாமதுரையில் ஸ்ரீபிரியா திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மானாமதுரை  தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை வெள்ளிக்கிழமை மாலைக் காட்சி பார்க்க வந்த திமுகவினர் மற்றும் ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்தார். 

திரையரங்கில் திமுகவினருடன்  உட்கார்ந்து திரைப்படம் பார்த்து ரசித்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி.

இதையடுத்து அந்த திரையரங்கு முன்பு திமுகவினர் திரளாக கூடி மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து திரைப்படம் வெளியானதை கொண்டாடினர்.  
பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரசிகர்களுக்கும், திமுகவினருக்கும் டிக்கெட்டுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தியேட்டருக்கு படம் பார்க்க அனுப்பி வைத்தார்.  மேலும், அவரும் திமுகவினருடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார். 

இந்நிகழ்ச்சியில் இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT