தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

DIN

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட பால் பவுடர், அரிசி, மருந்துப் பொருள்கள் இலங்கை சென்றடைந்தது.

உதவிப் பொருள்களை அனுப்பிவைத்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உள்பட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் இலங்கை வந்து சேர்ந்தது.

இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி கடந்த 18ஆம் தேதி அத்தியாவசியப் பொருள்களுடன்  கப்பல் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து இதனை தொடக்கி வைத்தார். 

இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான 9,000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பவுடா், 24 மெட்ரிக் டன் உயிா்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT