கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்க கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கூடலூரில் எஸ்டிபிஐ கட்சியின் நகர அலுவலகத்தில் நகர வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான அரசியல் பயிலரங்க கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா முன்னிலை வகித்தார், துணைத் தலைவர் கான் அப்துல் கபார்கான் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தற்போது உள்ள கள நிலவரம், சூழ்நிலை குறித்து ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி தலைவர் எம்.எம். அஜ்மீர்கான் விரிவான முறையில் எடுத்துரைத்தார். நகரச் செயலாளர் காதர் மைதீன் நன்றி கூறினார், நகர வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?- ரூ.71,900 சம்பளத்தில் செயல் அலுவலர் வேலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.