மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் 
தமிழ்நாடு

‘4 மாவட்டங்களில் கரோனா பரவல்’: மருத்துவத்துறை செயலர்

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்பை ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

“சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர்பிலிருந்த அனைவரையும் கண்காணித்து வருகிறோம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கரோனா கிளஸ்டர் உருவாகிறது.

பிஏ 4 வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொதுமக்கள் கவனக் குறைவாக உள்ளனர். பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! - நயினார் நாகேந்திரன் பதில்

டி20 உலகக் கோப்பை 2026: 20 அணிகளின் வீரர்கள் விவரம்!

சிறுசேரி சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா: முதல்வர் திறப்பு!

என் தனிமை நீங்கியது : முதல் கார் வாங்கிய சின்ன திரை நடிகை!

கென் கருணாஸின் யூத் வெளியீடு அப்டேட்!

SCROLL FOR NEXT