தமிழ்நாடு

சென்னை - திருப்பதி ரயில் 6 நாள்கள் ரத்து: சில புறநகர் ரயில்களும் இன்று இயங்கவில்லை

DIN

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை - திருப்பதி ரயில்

நாள்தோறும் பகல் 2.15க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருப்பதி விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காலை 10.10-க்கு திருப்பதியிலிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

நெல்லூர் - சூலூர்பேட்டை ரயில்

நெல்லூரிலிருந்து காலை 10.15க்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் ரயில்(06746) இன்று ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, சூலூர்பேட்டையிலிருந்து காலை 7.50க்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் புறநகர் ரயில்(06745) இன்று ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் ரயில்

சூலூர்பேட்டையிலிருந்து பகல் 12.35-க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில்(06742) இன்று ரத்து செய்யப்படுகிறது.

ஆவடி - சென்னை சென்ட்ரல் ரயில்

ஆவடியிலிருந்து சென்னை அதிகாலை 4.25க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT