தமிழ்நாடு

பெண்ணின் கைகளைக் கட்டி தலைமுடியை அறுக்கும் வைரல் விடியோ

பெண் ஒருவரின் கைகள் பின்னால் கட்டப்பட்டு அவரது தலைமுடியை அறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

DIN

பெண் ஒருவரின் கைகள் பின்னால் கட்டப்பட்டு அவரது தலைமுடியை அறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

விடியோவில் பெண் ஒருவர் நைட்டி அணிந்தபடி, தரையில் அமர்ந்திருக்கிறார். அவரது இரு கைகளும் சேர்த்து துணியால் கட்டப்பட்டுள்ளன. அருகில் உள்ள ஒரு நபர் அந்த பெண்ணை எட்டி உதைக்கிறார். பின்னர் கத்தரிக்கோலைக் கொண்டு அந்த பெண்ணின் முடியை வெட்டுகிறார். அதை வைத்து சரியாக வெட்ட முடியவில்லை என்று கத்தியை கொண்டு அறுக்கிறார். 

முடியை அறுக்கும் நபர் கார்த்தி என்பதும் அந்த பெண்ணின் பெயர் பானு என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருமே  இரண்டாம் திருமணம் செய்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது, கார்த்திக்கு பானு இரண்டாவது மனைவி என்பதும், பானுவிற்கு கார்த்தி இரண்டாவது கணவர் என்றும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

சில மாதங்களாக வடபழனியில் தங்கியிருந்த இவர்கள் தற்போது அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்தில் தங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

பெண்ணின் கைகளை கட்டி அவரது தலைமுடியை அறுக்கும் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூடான், லெபனான் வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

இளையராஜாவிடம் விருது பெற்ற பாக்யஸ்ரீ போர்ஸ்!

பட்ஜெட்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

SCROLL FOR NEXT