மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தீ வைத்து எரித்த வடமாநில இளைஞர்கள். 
தமிழ்நாடு

ராமேசுவரத்தில் பதற்றம்... இளம் மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரிப்பு

ராமேசுவரம் வடகாடு இறால் பண்ணையில் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தீ வைத்து எரித்தை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்

DIN

ராமேசுவரம்: ராமேசுவரம் வடகாடு இறால் பண்ணையில் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தீ வைத்து எரித்தை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் திரண்டு இறால் பண்ணையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடகாடு பகுதியை சேர்ந்த பாலு இவரது மனைவி சந்திரா(40) கடல் பாசி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், செவ்வாய்கிழமை காலையில் சந்திரா கடல் பாசி எடுக்க சென்றுள்ளர். இரவு வரை வீடு திரும்பவில்லை. 

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடகாடு பகுதி மக்கள்.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் தேடிச்சென்றுள்ளனர். இறால் பண்ணையில் நிர்வாண நிலையில் எரிந்த நிலையில் உடல் காணப்பட்டது. 

இதனை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இறால் பண்ணையில் இருந்தவர்கள் மீனவ பெண்ணை கூட்டு பாலியலுக்கு உள்படுத்தி இறந்தவுடன் எரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து, கிராம மக்கள் திரண்டு இறால் பண்ணைக்கு தீ வைத்துள்ளனர். அங்கு வந்த போலீசார் கூட்டு பாலியலுக்கு உள்படுத்திய 6 பேரை கைது செய்துள்ளனர். 

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடகாடு பகுதி பெண்கள்.

மேலும், கிராம மக்கள் திரண்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இறால் பண்ணையை விட்டு ஒரிசா மாநில இளைஞர்களை காவல்துறையினர் வெளியே கொண்டு வர முடியாத நிலை காணப்படுவதால் ராமநாதபுரத்தில் இருந்து போலீசார் விரைந்துள்ளனர். 

ராமேசுவரத்தில் மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு  பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கிராம பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாவல் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

Vijay Screen-க்குப் பின்னாலிருந்து பேசுகிறார்! வெளியே வரட்டும் பார்ப்போம்! - துரைமுருகன்

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

துல்கர் சல்மான் - 41 அப்டேட்!

SCROLL FOR NEXT