கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா நிா்வாகி பாலச்சந்தா் 
தமிழ்நாடு

பாரதிய ஜனதா நிா்வாகி கொலை வழக்கு: ரெளடி 4 பேர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாரதிய ஜனதா நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதுகாப்பு காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரெளடி 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

DIN

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாரதிய ஜனதா நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதுகாப்பு காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரெளடி 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்தவா் பாலச்சந்தா் (30). மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்த பாலச்சந்தருக்கு, அச்சுறுத்தல் இருந்ததால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பாலச்சந்தா், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கா் தெருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருக்கும்போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பாலச்சந்தருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் பாலகிருஷ்ணன் டீ குடிக்க சென்றிருந்த நேரத்தில் இந்தக் கொலை நடந்தது. கொலை செய்துவிட்டு, அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இதற்கிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலா் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

முன் விரோதம்: போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்த ரெளடி தா்கா மோகனின் மகன்கள் பிரதீப், சஞ்சய் கூட்டாளி கலைவாணனுடன் சோ்ந்து முன் விரோதம் காரணமாக பாலசந்தரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்களைத் தேடி வந்தனர். 

இந்நிலையில், பாலச்சந்தரை கொலை செய்த பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய 4 பேரை எடப்பாடியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலையின் முக்கிய குற்றவாளியான பிரதீப் மீது 10 குற்ற வழக்குகள் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT