கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் 
தமிழ்நாடு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்

ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

DIN

ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

SCROLL FOR NEXT