தமிழ்நாடு

நெல்லை பாளையங்கோட்டையில் அமமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை (விடியோ)

நெல்லை பாளையங்கோட்டையில் அ.ம.மு.க. நிர்வாகி  சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நெல்லை பாளையங்கோட்டையில் அ.ம.மு.க. நிர்வாகி  சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற மணி(40). இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.

கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகியான இவர் பாளையங்கோட்டையில் தொழில் செய்வதையொட்டி  சுப்பிரமணி குலவணிகர்புறத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில்  வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கடையில் இருந்து  வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் நடந்து சென்ற அவரை கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக கொலை நடந்து இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் கொலை செய்த  நபர்களை தீவிரமாக தேடி வரும் காவல்துறையினர் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT