முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.72.4 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.72.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ.72.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச்சி சங்கிலி (22 காரட்), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத் தங்களின் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம், மொத்த மதிப்பு ரூ.72.4 லட்சம். இதுதொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள்
கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →