முகப்பு
தமிழ்நாடு

'வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்' - நீதிமன்றம்

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா கடந்த 2002-03 முதல் 2006-07 வரையிலான நிதியாண்டுக்கு வருமானவரி தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இதையடுத்து தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த வழக்கின் விசாரணையில், வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாததால் வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →