தமிழ்நாடு

சிவகங்கை அருகே சிறுவர்களுக்கான நுங்கு, டயர் வண்டி போட்டிகள்

DIN

சிவகங்கை அருகே பனங்குடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாக நுங்கு வண்டி மற்றும் டயர் வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் உற்ச்சாகமாக கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பனங்குடி கிராமத்தில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில், இறை இயேசுவின் விண்ணேற்பு விழா நடைபெற்று வருகிறது.

இவ்விழாவினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டினை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாக நுங்கு வண்டி மற்றும் டயர் வண்டி பந்தயம் நடைபெற்றது.  

ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் பந்தய எல்லையாகவும், பெண்கள் பிரிவிற்கு 50 மீட்டா் பந்தய எல்லையாகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 11 சிறுவர்களும், பெண்கள் பிரிவில் 10 சிறுமியர்களும் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கனை பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்கள் என பலரும் கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள். இதில் முதல் 3 இடங்களை பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு தலா ரூ1000, ரூ.500 மற்றும் ரூ.300 பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

மறைந்து வரும் நமது பாரம்பரிய விளையாட்டை மீட்கும் விதமாக நடைபெற்ற இப்போட்டி பார்வையாளர்களை உற்ச்சகப்படுத்தியது என்றாலும், கிராமத்தில் நடைபெறும் இது போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டியினை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக தமிழகமெங்கும் நடத்த வேண்டும் என்பது மூத்த குடிமக்களின் விருப்பமாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT