தமிழ்நாடு

கருணாநிதி பெயரில் விருது: எஸ்.பி. முத்துராமன் தலைமையில் குழு அமைப்பு

DIN


முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெயரில் ‘’கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’’ வழங்குவதற்கு ஏதுவாக திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இதுபற்றிய அரசு செய்திக் குறிப்பு:

"தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் ‘’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’’ வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2) அவ்வகையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத் துறை வித்தகர் விருதை 2022 ஆம்ஆண்டு ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனை தலைவராகவும், நடிகர் / நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நடிகர் /இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவினை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

3) தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ.10 இலட்சம் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றினை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜூன்3 ஆம் நாளன்று முதல்வர் வழங்கி கௌரவிப்பார்கள்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT